திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Kazhuvethi Moorkan Movie Review – அய்யனார் மீசையுடன் மிரட்டும் அருள்நிதி.. கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த், சாயாதேவி, சுப்பிரமணியன் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலரை பார்க்கும் போதே வித்தியாசமான லுக்கில் அருள்நிதி இருந்தார்.

அதாவது அய்யனார் மீசையுடன் கையில் கத்தி, அருவா என கிராமத்து கெட்டப்பில் பட்டையை கிளப்பி இருந்தார். கண்டிப்பாக இந்த படத்தில் அருள்நிதி சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு படத்தில் பஞ்சம் வைக்காத அளவுக்கு சண்டைக் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துள்ளார் அருள்நிதி.

Also Read : அருள்நிதிக்கு கை கொடுத்ததா கழுவேத்தி மூர்க்கன்? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

சமீபத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான இராவண கோட்டம் படத்தை போன்ற கதையம்சம் தான் கழுவேத்தி மூர்க்கன் படமும். அதாவது உயர் சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒன்றாக பழகி வருகிறார்கள். மேலும் உயர் சாதியில் உள்ள அருள்நிதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியில் இருக்கும் சந்தோஷ் பிரதாப் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

மேலும் தன்னுடைய சமூகத்திற்கு கல்வி போன்ற சில விஷயங்கள் கிடைக்க வேண்டும் என சந்தோஷ் போராடுகிறார். மேலும் இரு சாதியினரும் ஒன்றாக உள்ளதால் சாதியை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்நிலையில் சந்தோஷ் கொலை செய்யப்பட்டு அந்த பலி அருள்நிதி மீது விழுகிறது.

Also Read : கொலை பண்றது வீரம் இல்ல, 10 பேர காப்பாத்தறது தான் வீரம்.. அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் டீசர்

இதிலிருந்து எப்படி அருள்நிதி மீண்டு வருகிறார் என்பது தான் கழுவேத்தி மூர்க்கன். ஆக்சன், காதல், காமெடி என எதையும் மிச்சம் வைக்காமல் எல்லாவற்றிலும் பட்டையை கிளப்பி உள்ளார் அருள்நிதி. நடிகை துஷாரா விஜயன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு சரியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சந்தோஷ் பிரதாப் அவர்களின் நடிப்பும் அருமையாக அமைந்திருந்தது. டி இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்துள்ளது. மேலும் கிராமத்து பசுமையையும், புழுதியையும் கண்முன் அழகாக காட்டியிருந்தார் ஒளிப்பதிவாளர். கழுவேத்தி மூர்க்கன் அருள்நிதிக்கு சரியான கம்பேக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5/5

Also Read : மாடர்ன் ரோலில் நடித்து மொக்கை வாங்கி 5 நடிகைகள்.. சரி வராதுன்னு கிராமத்து கேரக்டருக்கு திரும்பிய கனகா

Trending News