வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அர்ணவை அசால்ட்டா டீல் செய்த விஷால் அருண்.. ஹீரோயிசம் பண்ண வந்தா ஜோக்கர் ஆக்கிட்டாங்களே

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் சுவாரசியமாக இருந்தது. அதில் பழைய எட்டு போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து சம்பவம் செய்தனர்.

அதில் ரவீந்தர் பேசியது உண்மையிலேயே ரசிக்கும் வகையில் இருந்தது. ஆனால் சிலர் பழைய வன்பத்தை கொட்டுவதற்காகவே வீட்டுக்குள் வந்தது போல் இருந்தது.

அதில் தர்ஷா ஏதோ சம்பவம் பண்ண போறேன்னு வந்து மொக்கை வாங்கினார். அதை அடுத்து அர்ணவ் ஹீரோ போல் என்ட்ரி கொடுத்தார்.

அதே வேகத்தில் பாய்ஸ் டீம் மேல் இருக்கும் மொத்த வன்மத்தையும் கொட்டினார். ஜால்ரா பசங்களா என ஆரம்பித்து சட்டை இல்லாதவன் என சத்யாவை கலாய்த்து தள்ளினார்.

அர்ணவை அசால்ட்டா டீல் செய்த விஷால் அருண்

அதேபோல் ஜெஃப்ரியை நோண்டுவான் தடவுவான் என கொச்சையாக பேசினார். இத்தனைக்கும் இவர்கள் இருவரும் இப்போது வீட்டுக்குள் இல்லை.

ஆனாலும் அவர்களைப் பற்றி பேசி மற்ற போட்டியாளர்களின் கோபத்திற்கு ஆளானார். அதை அடுத்து விஷாலிடம் ஏதோ லவ் போய்கிட்டு இருக்காமே என நக்கல் அடித்தார்.

இதற்கெல்லாம் அசராத விஷால் அப்படி இருந்தா பத்திரிகையோட உங்களை வந்து பார்க்கிறேன் என அசால்ட் ஆக டீல் செய்தார்.

அதை அடுத்து அருணிடம் வாய் கொடுத்து மாட்டினார் அர்ணவ். உங்க கண்ணுல விரலை விட்டு ஆட்ட தான் வந்து இருக்கேன் என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டார்.

இதற்காகவே காத்திருந்த அருண் முடிஞ்சா செஞ்சு பாரு எனக்கூறி சில அறிவுரையும் கொடுத்தார். ஆனாலும் திருந்தாத அர்ணவ் ஹீரோவாக நெனச்சு கோமாளி ஆனது தான் மிச்சம்.

மேலும் விஷாலை பற்றி பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கு. ஏற்கனவே மனைவியும் குழந்தையும் விட்டுவிட்டு சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருந்தவர் தான் இவர்.

அதெல்லாம் மறந்து போச்சா. எதுக்காக விஷாலை வம்புக்கு இழுக்க வேண்டும் என ஆடியன்ஸ் அவரை திட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Trending News