திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் சேதுபதியை மதிக்காத ஹவுஸ் மேட்ஸ்.. கண்ணம்மா வீட்டுக்கார் கொடுத்த ரியாக்ஷன்

Biggboss 8: நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ஆடியன்ஸ் விஜய் சேதுபதியை கொண்டாடி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் வந்தது.

இதற்கு முக்கிய காரணம் அவர் சில விஷயங்களைப் பற்றி ஓப்பனாக பேசாதது தான். ஆனால் நேற்று அவர் கோவா கேங் செய்த அட்டகாசங்களை லிஸ்ட் போட்டு கேட்டார்.

அவர்களின் விளையாட்டு மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் சற்று கோபத்தோடு கூறினார். ஆனால் நீ என்ன வேணா சொல்லிக்கோ என்ற ரீதியில் இருந்தது அவர்களின் ரியாக்சன்.

அதேபோல் விஜய் சேதுபதி பேசும்போது அருண் கொடுத்த ரியாக்சன் பார்ப்பவர்களுக்கு கடுப்பை வரவழைத்தது. ஏனென்றால் கோவா அணியோடு இவர் அடித்த அரட்டையை நாம் பார்க்கத்தான் செய்தோம்.

பிக் பாஸ் அருண் செய்த மோசமான செயல்

அதை VJS கேட்டபோது அருண் முறைப்பது போல் ஒரு பார்வை பார்த்தார். அங்கு அமர்ந்திருந்த தீபக் கூட இதனால் அதிருப்தி அடைந்து ஒரு ரியாக்சன் கொடுத்தார்.

இதைத்தான் ஆடியன்ஸ் சோசியல் மீடியாவில் கிழித்து வருகின்றனர். ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தன்னுடைய வேலையை செய்கிறார்.

அதிலும் அவர் திறமையான மிகப்பெரிய நடிகர். அப்படி இருக்கும்போது இந்த சீசன் போட்டியாளர்கள் எதற்கு மரியாதை இல்லாமல் நடந்து கொள்கின்றனர்.

அப்படி என்ன வீட்டில் இருப்பவர்கள் பெரிய ஆளாகி விட்டார்கள் என விஜய் சேதுபதிக்கு ஆதரவாக ரசிகர்கள் எழுந்துள்ளனர். இன்னும் சிலர் விஜய் சேதுபதி ஸ்ட்ரிக்ட் ஆக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் தயவு செஞ்சு மன்னிச்சுக்கோங்க என்பது போல் பல நேரங்களில் பேசுகிறார். இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

Trending News