செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அருண் பாண்டியன் நடித்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பல ஹீரோக்களுக்கே டப் கொடுத்துருக்காரு மனுஷன்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக தற்போது அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் அருண் பாண்டியன். ஊமைவிழிகள் என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அடையலாம் காமிக்கப்பட்டார், ஆனால் இவரது முதல் படம் சிதம்பர ரகசியம்.

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் அருண்பாண்டியன். அதுமட்டுமில்லாமல் தற்போது அயங்கரன் இன்டர்நேஷனல் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

அருண் பாண்டியனுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர், அதில் கீர்த்தி பாண்டியனை எப்படியாவது நடிகைக்கான அங்கீகாரம் கிடைத்து விட வேண்டும் ஒரு சில படங்களை வெளியிட்டு வந்தார். அருண் பாண்டியன் நடிப்பில் பிரம்மாண்ட ஹிட்டடித்த படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

சிதம்பர  ரகசியம்: விசுவின் இயக்கத்தில் எஸ்.வி.சேகர், விசு, டெல்லி கணேஷ், அருண்பாண்டியன், இளவரசி போன்ற பிரபலங்கள் நடிப்பில், 1985-ல் வெளிவந்த படம் சிதம்பர ரகசியம். இந்த படம் காமெடி மற்றும் த்ரில்லர் கலந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம். 150 நாட்களை தாண்டி மாபெரும் வெற்றி பெற்றது.

ஊமை விழிகள்: அரவிந்த் ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், அருண்பாண்டியன், சந்திரசேகர், ஜெய்சங்கர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1986ல் வெளிவந்த படம் ஊமை விழிகள். த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்த படம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரவிச்சந்திரன் மற்றும் மலேசியா வாசுதேவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள். 150க்கு மேல் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கில் மரண மந்திரம் என்று ரீமேக் செய்யப்பட்டது.

omai-viligal
omai-viligal

இணைந்த கைகள்: விஸ்வநாதன் இயக்கத்தில் ராம்கி, அருண் பாண்டியன், நாசர், செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1990ல் வெளிவந்த படம் இணைந்த கைகள். இந்த படமும் தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம். இந்த படத்தின் வெற்றியை வைத்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அசுரன்: வேலு பிரபாகரன் இயக்கத்தில் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பில் அருண்பாண்டியன், ரோஜா, ராதாரவி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1995ல் வெளிவந்த படம் அசுரன். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது, மன்சூரலிகான் வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் ஹாலிவுட் படத்தின் தழுவல்  என்பது குறிப்பிடத்தக்கது.

தேவன்: தானே இயக்கி, தயாரித்து, நடித்தது தேவன், இந்த படத்தில்  அருண்பாண்டியனுடன் மீனா, கௌசல்யா, விவேக், சாய்குமார் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இது அவருக்கு 100வது படமாகவும் அமைந்தது. இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தியில் டப் செய்யப்பட்டது. ஆக்ஷன் திரில்லர் கலந்த தேவன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Trending News