வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த அருண் விஜய், ஹரி.. பிரம்மாண்ட ஏற்பாட்டுக்கு கிடைத்த மோசமான பரிசு

சமீபகாலமாக அருண் விஜய்யின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அருண் விஜய் பல படங்களில் பிசியாகயுள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் யானை.

இப்படம் அருண் விஜய்யின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமையும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார். ஆனால் படம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். மேலும், படத்தின் ரிலீஸ் தேதியும் ஒவ்வொரு முறை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

அருண் விஜய் யானை படத்தை ரிலீஸ் செய்துவிட்டு தான் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற யோசனையில் உள்ளாராம். மேலும், அருண் விஜய் தன்னுடைய சம்பளத்தையும் சமீபத்தில் உயர்த்தியுள்ளார். தற்போது யானை படத்தின் புரமோஷனுக்காக மலேசியாவில் விநியோகஸ்தர் ஒருவர் மிகப்பெரிய ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழ்நாட்டு பாரம்பரியத்தின் படி இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் இயக்குனர் ஹரி மற்றும் அருண்விஜய் இடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும் இவர்கள் இருவருமே இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்காக மலேசியா செல்வதாக இருந்தது.

ஆனால் தற்போது யானை படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயுள்ளது. இதனால் யானை படத்தின் பிரமோஷனுக்காக செய்திருந்த அனைத்து ஏற்பாடுகளும் தற்போது வீணாக போய் உள்ளது. இதனால் இப்போது அருண் விஜய் மற்றும் ஹரி இருவருமே தங்களது ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.

இவ்வளவு பிரம்மாண்டமாக பிரமோஷன் நிகழ்ச்சி யானை படத்திற்கு அமைந்தும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதால் அவை அனைத்தும் வீணாகி போய்விட்டதே என்ற கவலையில் அருண்விஜய் உள்ளாராம். மேலும், எப்போதுதான் யானை படத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என்ற யோசனையில் அருண் விஜய் உள்ளார்.

Trending News