திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கூலிங் கிளாஸ், வேஷ்டியுடன் கெத்தாக போஸ் கொடுத்த அருண் விஜய்.. ஹரி பட சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது பல இயக்குனர்கள் அருண் விஜய்யை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

அருண் விஜய் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ஏவி 33 எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

அருண் விஜய் மற்றும் ஹரி கூட்டணி இணைந்து அதிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அருண் விஜய் சமீபகாலமாக ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஹரி ஆக்ஷன் மற்றும் பஞ்ச் வசனங்களில் கலக்குபவர். இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதால் ஆக்க்ஷன் மற்றும் பஞ்ச் வசனங்களில் அருண்விஜய் சூப்பராக நடித்திருப்பார் என கூறிவருகின்றனர்.

av33
av33

இப்படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் எனவும் அடுத்தடுத்து இவருக்கு முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது அருண் விஜய் கிட்டத்தட்ட 5 படங்கள் நடித்துள்ளார் இந்த படங்கள் வெளியானால் போதும் அருண் விஜய் பெரிய அளவில் அனைவராலும் கவனிக்கப்பட்டார் என கூறி வருகின்றனர்.

arun-vijay-shooting-spot-av33
arun-vijay-shooting-spot-av33

தற்போது இவர் நடித்துவரும் ஏவி33 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தில் ஹரி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒரு திரில்லர் காட்சிகள் படப்பிடிப்பு நடத்துவது போல் தெரிகிறது. தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News