திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

என் படத்தில் வில்லனாக நடிங்க.. அருண் விஜய்க்கு தூது விட்ட இயக்குனர்

அருண் விஜய் சமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடிப்பதை விட ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த வகையில் அடுத்தடுத்து பார்டர், அக்னி சிறகுகள், ஹரி படம் என வரிசைகட்டி நிற்கின்றன.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை மீட்டெடுத்தவர் அருண் விஜய். அதன்பிறகு தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக சில படங்களில் நடித்தார்.

அதுமட்டுமில்லாமல் அருண் விஜய் வில்லனாக நடித்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு இந்திய அளவில் ஒரு அறிமுகம் உள்ளது.

இதன் காரணமாக அருண் விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே மற்ற மொழிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. நடிகராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் அருண்விஜய் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.

அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை தொடரலாம் என்ற நேரத்தில் தான், என்னுடைய படத்தில் வில்லனாக நடிக்க நீங்கள் தான் சரியான ஆள் என கூறிவிட்டாராம் இயக்குனர் லிங்குசாமி. லிங்குசாமி ஒரு வெற்றிப்படம் கொடுக்க போராடி வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ராம் போத்தேனி என்பவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். படத்தில் அருண் விஜய் நடித்தால் படத்தின் தமிழ் மார்க்கெட்டுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என கேட்டுள்ளாராம். ஆனால் தற்போது வரை அருண்விஜய் மௌனம் சாதிப்பதாக கூறுகின்றனர்.

lingusamy-next-movie
lingusamy-next-movie

Trending News