ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இந்த சின்ன பையன் யார் தெரியுமா? தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆச்சே

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த நடிகர் தான் இந்த சின்ன பையன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற பெயருக்கு ஏற்றார் போல் பல வருடங்களாக முயற்சி செய்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. ஆனால் அதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வெற்றி பெற்று தனக்கான இடம்பிடித்துள்ளனர். அந்த வரிசையில் பல வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய்.

இவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார். வாரிசு நடிகராக அருண் விஜய் சினிமாவில் கால்பதித்து இருந்தாலும் வெற்றிக்காக பல வருடங்கள் போராடி கொண்டிருந்தார்.

arunvijay-cinemapettai
arunvijay-cinemapettai

பல வருட போராட்டத்திற்கு பிறகு அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அருண் விஜய் அதன்பிறகு தொடர்ந்து சரியான கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து வெற்றியை மட்டும் கொடுத்து வருகிறார்.

ஒரு பக்கம் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என கலக்கி வந்தாலும், ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதைய அருண் விஜய் கை வரிசையாக அக்னிச்சிறகுகள், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்கள் விரைவில் வெளிவர உள்ளன.

Trending News