புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்.. 7 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் த்ரில்லர் படத்தின் 2-ம் பாகம்

அருண் விஜய் சமீபகாலமாக நிறைய படங்கள் நடித்து வருகிறார். ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி கொண்டு இருக்கிறது. இப்பொழுது இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் உடன் நடித்திருந்த அவரின் யானை படம் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கூடிய விரைவில் அந்த படமும் அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சூப்பர் ஹிட் திரில்லர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படம்தான் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடிக்கப்போகும் முதல் பேய் படம்.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு ஆர் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி’  என்ற சூப்பர் ஹிட் அடித்த திரில்லர் படம். இதில் அருள்நிதி உடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிமான்டி காலனி  திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்பு பெற்ற படம் என்பதால், இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் அஜய் ஞானமுத்து.

நீண்ட நாட்களாக நாட்களாக ரசிகர்கள் இதைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் இப்பொழுது அருண்விஜய் ஒப்பந்தமாகியிருக்கிறார். கூடிய விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து தயாரிக்க, அவருடன் இணை இயக்குனராக வெங்கி வேணுகோபால் படத்தை சேர்ந்தேன் இயக்குகிறார்.

7 வருடங்களாக டிமான்டி காலனி 2 திரைப்படத்திற்காக தமிழ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அருண் விஜய் உடன் டிமான்டி காலனி படத்தின் பாகத்தில் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்த அருள்நிதியும் இணைந்து நடிக்க உள்ளார்.

நான்கு நண்பர்கள் ஒரு வீட்டில் பேய் ஒன்றின் தாக்கத்தினால் உயிரிழந்தது போன்ற கதை அம்சத்தை கொண்ட டிமான்டி காலனி முதல் படத்தின் கதை தொடர்ச்சியாகவே படத்தின் இரண்டாம் பாகம் இருக்கும் என அஜய் ஞானமுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Trending News