திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

13வது பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்யின் மகள்.. அப்பாவுடன் ஒரே செல்பி, ஒன் மில்லியனை தொடப்போகும் லைக்ஸ்!

அருண் விஜய் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் வந்த விக்டர் கதாபாத்திரத்திற்கு பிறகு அவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறிக்கொண்டிருக்கிறது. வில்லனாக ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாகவும் தன்னுடைய இழந்த மார்க்கெட்டை மீட்டுள்ளார்.

வாரிசு நடிகராக இருந்தாலும் இவருக்கு சும்மா ஒன்றும் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இவரும் பல்வேறு அவமானங்களை சந்தித்துதான் தனக்கென ஒரு பாதையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார்.

அந்த பாதையை எக்காரணத்தைக் கொண்டும் நழுவ விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். தற்போது அருண் விஜய் எப்படி படம் நடித்தாலும் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில் அடுத்ததாக அருண் விஜய் மற்றும் அறிவழகன் வெற்றிக் கூட்டணியில் பார்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அருண் விஜய்யின் தனித்துவமான நடிப்பிற்கு தற்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார்.

தற்போது 13வது பிறந்தநாளை கொண்டாடிய அருண் விஜய்யின் மகள் தனது அப்பாவுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் லைக்ஸ் போட்டு வருகின்றனர்.

arun-vijay-daughter-1
arun-vijay-daughter-1

Trending News