வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆர்யாவால் பட இயக்குனரை துரத்தி விட்ட அருண் விஜய்.. அவனுக்கு சாவு பயத்தை காட்டிட்ட எனக்குமா?

Arya – Arun Vijay: நடிகர் அருண் விஜய் சினிமாவில் ஒரு வெற்றிக்காக பல வருடமாக போராடி சமீப காலமாகத்தான் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், இவராகவே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு நடித்து வருகிறார். தன்னை ஒரு நல்ல நடிகனாக நிரூபிப்பதில் இவருக்கு எந்த ஈகோவும் இருந்ததில்லை.

நடிகர் சூர்யா நடித்து பாதியிலே விலகிய வணங்கான் திரைப்படத்திலும் தற்போது அருண் விஜய் தான் நடித்து வருகிறார். இயக்குனர் பாலாவின் படங்கள் என்றால் நடிகர்கள் ரொம்பவே பயந்து ஒதுங்கி போவது உண்டு. ஆனால் அருண் விஜய், படம் ஹிட் ஆகிறதோ அல்லது தோல்வியடைகிறதோ பாலாவின் படத்தில் நடித்தால் கண்டிப்பாக தனக்கு ஒரு நல்ல நடிகர் என்று அடையாளம் கிடைக்கும் என துணிந்து நடித்து வருகிறார்.

Also Read:அட்டர் ஃப்ளாப்பால் மோசம் போன அக்கட தேசத்து நடிகர்.. அஜித், சூர்யா பட இயக்குனர் காட்டிய பந்தா!

இந்த நிலையில் நடிகர் ஆர்யாவால் அருண் விஜய் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருக்கிறார். நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் தேவையில்லாத இப்படி ஒரு முடிவை எடுத்து கேரியருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற மரண பயத்தை காட்டி இருக்கிறார் ஆர்யா.

நடிகர் ஆர்யா சமீபத்தில் நடித்து ரிலீசான திரைப்படம் காதர் பாட்ஷா. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் ரிலீசுக்கு பிறகு இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே நொந்து போய்விட்டார்கள். அந்த அளவுக்கு படம் ரொம்பவும் மொக்கையாகவும், சகித்துக் கொண்டு கூட பார்க்க முடியாத அளவிலும் இருந்தது.

Also Read:நடிக்க தெரியலன்னு சிம்பு படத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. ரெண்டு ஹிட் கொடுத்து மூக்கு உடைத்த சம்பவம்

நடிகர் ஆர்யாவின் காதர் பாட்ஷா படத்திற்கும், அருண் விஜய்க்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால், அருண் விஜய், காதர் பாஷா படத்தின் இயக்குனர் முத்தையாவுடன் பணிபுரிய ரொம்பவே ஆசைப்பட்டு இருக்கிறார். இதற்கு காரணம் முத்தையாவின் முந்தைய படங்களான கொம்பன், விருமன் போன்ற படங்கள்தான். இதனால் அருண் விஜய் அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் காதர் பாட்ஷா படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு முத்தையாவுடன் படம் பண்ண விருப்பம் இல்லாமல் போய்விட்டது. இப்போதுதான் கேரியர் கொஞ்சம் நல்ல நிலைமையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் காதர் பாட்ஷா போல் ஒரு படம் அமைந்துவிட்டால் கேரியர் மொத்தமாய் க்ளோஸ் ஆகிவிடும் என்று பயந்த அருண் விஜய் முத்தையா படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார்.

Also Read:வாய் சவடால், அஜித் படத்தை தரக்குறைவாக பேசிய இயக்குனர்.. அடாவடி பேச்சுக்கு ஆப்படித்த சம்பவம்

Trending News