சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அடுத்தடுத்து அருண் விஜய்க்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. யோசிக்க வைத்த அமரன் படம்

வணங்கான் படம் முழுவதுமாக முடிந்து விட்டது பொங்கல் விடுமுறையை குறிவைத்து ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. யானை படத்திற்குப் பிறகு அருண் விஜய் பெரிதும் நம்பியிருக்கப்படும் இதுதான்.

இப்பொழுது தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் அருண் விஜய். தடையற தாக்க என்னை அறிந்தால், குற்றம் 23 என இரண்டாவது இன்னிங்ஸில் பல ஹிட் கொடுத்தாலும். தொடர்ந்து இவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இப்பொழுது பாலா இயக்கத்தில் வெளிவர உள்ள வணங்கான் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். ஏற்கனவே அருண் விஜய் குடும்பத்தோடு அந்த படத்தை பார்த்துள்ளார். அவர் தந்தை விஜயகுமார் என மொத்த குடும்பமும் பாலாவிற்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்து உள்ளது.

இப்பொழுது இந்த வணங்கான் படம் ரிலீஸ் ஆன பிறகு அடுத்தடுத்து அவர் நடித்து முடித்திருக்கும் படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். ஏற்கனவே நான்கு வருடத்திற்கு முன்பு அருண் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் “பார்டர்” .

பார்டர் படம் மிலிட்டரி சம்பந்தப்பட்ட கதையாம். ஏற்கனவே சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்த படமும் மிலிட்டரி கதை. அதனால் இப்பொழுது பார்டர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

வணங்கான், பார்டர், இட்லி கடை, ரெட்டை தல என அடுத்தடுத்து அருண் விஜய் நடிப்பில் து படங்கள் வெளிவர இருக்கிறது. வணங்கான் பட ரிலீசுக்கு தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் அந்த படம் ஹிட் ஆகும் என மழை போல் நம்பி உள்ளார் அருண் விஜய். இதன் மூலம் மத்த படங்களையும் பிசினஸ் செய்து விடலாம் என மனக்கணக்கு போட்டு வருகிறார்.

Trending News