ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

நாகூர் தர்காவில் தொழுகை செய்த அருண் விஜய்.. புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அருண்விஜய் தொடர்ந்து ஆரம்ப காலத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து தவித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகராகவும் வலம் வர முடியாமல் போராடி வந்தார்.

அதன் பிறகு ஒவ்வொரு பழங்களிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்த அருண் விஜய்க்கு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ஒரு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

அருண் விஜய் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகராக அருண்விஜய் உருவாக்கினார். பின்பு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

arun vijay
arun vijay

அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கிறார். அதனால் தற்போது தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன தற்போது இயற்கை வரிசையாக பாக்ஸர், சீனம், அக்னி சிறகுகள் மற்றும் பார்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

arun vijay
arun vijay

அருண் விஜய் தர்காவில் தொழுகை செய்துள்ளார். இப் புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் எம்மதமும் சம்மதம் என குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் எதற்காக அருண்விஜய் திடீரென எதற்காக தர்கா போய் இருப்பார் எனவும் கேட்டு வருகின்றனர். தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News