வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அருண் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜ்க்கு பதிலாக களத்தில் முன்னணி நடிகர்.. யார் என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. தற்போது தொடர்ந்து பல படங்களில் அருண்விதமிழ் சினிமா ஜய் நடித்து வருகிறார்.

அருண் விஜய் நடிப்பில் தற்போது பாக்சர், பார்டர், அக்னி சிறகுகள் மற்றும் சினம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. மேலும் இப்படத்தின் வரவேற்பை பொறுத்தே அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் எனவும் கூறிவருகின்றனர்.

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் AV33 எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் யோகிபாபு சமுத்திரக்கனி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் முதன் முதலில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்திற்கு பிரகாஷ்ராஜ் நடிக்க படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் சமீபத்தில் பிரகாஷ்ராஜுக்கு தோள்பட்டையில் விபத்து ஏற்பட்டு ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பின்பு பிரகாஷ்ராஜ் தன்னால் படப்பிடிப்பு கலந்து கொள்வதற்கு கால தாமதமாகும் என்பதால் ஹரியிடம் வேறு ஏதாவது ஒரு நடிகரை தனது கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். மேலும் மற்றொரு படத்தில் சந்திப்போம் எனவும் கூறியுள்ளார்.

samuthirakani
samuthirakani

தற்போது பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழு பிரகாஷ்ராஜ்க்கு பதிலாக சமுத்திரகனியை இப்படத்தில் நடிக்க வைத்து வருகின்றனர். மேலும் இதில் சமுத்திரக்கனி அருண் விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இணைந்ததன் மூலம் அடுத்தடுத்த படங்களில் சமுத்திரகனி நடிப்பார் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

Trending News