வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அருண் விஜய் படத்தில் நடித்த 2 நடிகர்கள்.. 3 பேருமே ஒரே குடும்பம்

நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார். இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் உச்சத்தில் இருந்த நடிகை ஆவார். தற்போது இவர் மகன் அருண் விஜய்யும் முன்னணி நடிகராக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் இவரது பேரனும், அருண் விஜய்யின் மகனுமான ஆர்ணவ் விஜய் இணைய உள்ளார்.

திரையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடிப்பில் ஜொலிப்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் நடிகர் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ் விஜய் வரை தொடர்கிறது.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் உருவாகும் புதிய படத்தில், தாத்தா, தந்தை, மகன் மூவரும் இணைந்து நடிக்கும் செய்தி, ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆர்ணவ் விஜய் இன்று தனது காட்சிகளுக்கான, டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார்.

arun vijay
arun vijay

இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இயக்குனர் சரவ் சண்முகம் எழுதி, இயக்கியுள்ள இப்படம், குழந்தைகளை மையப்படுத்தி, 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

Trending News