ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அருண் விஜய்க்காக பிரபல இசையமைப்பாளருடன் இணையும் ஹரி.. எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் பல இயக்குனர்கள் தற்போது அருண் விஜய்யை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

தற்போது அருண் விஜய் நடிப்பில் சினம் மற்றும் பார்டர் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. அடுத்ததாக அருண் விஜய்யுடன் ரித்திகா சிங் இணையும் பாக்ஸர் படத்தின் அறிவிப்பு வெளியாகி இன்னும் படப்பிடிப்பு நடத்தாமல் உள்ளனர். சரோ சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் விஜய் இணைந்து நடித்த படம் ஓ மை டாக் அமேசானில் வெளிவரவுள்ளது.

தற்போது அருண் விஜய் ஹரி இயக்கத்தில் ஒரு கிராமத்து கதையில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், இமான் அண்ணாச்சி, ராதிகா மற்றும் யோகிபாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஹரியின் படத்திற்கு பல இயக்குனர்கள் இசையமைத்துள்ளனர். ஆனால் ஹரி இயக்கும் AV33 படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் சமீபகாலமாக பல படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவு வெற்றியை கொடுக்கும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

Trending News