வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எரிகிற நெருப்பில் எண்ணெய ஊற்றிய அருண் விஜய்.. சூர்யாவிற்கு வந்த அடுத்த தலைவலி

கங்குவா படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் நொந்து போய் உள்ளார் சூர்யா. ஏன் அவருக்கு எதிராக இப்படி கட்டம் கட்டி அசிங்கப்படுத்துகிறார்கள் என்று அவருக்கு தெரியவில்லை. சூர்யாவை பொருத்தவரை அவருடைய முழு அர்ப்பணிப்பையும் படத்திற்காக கொடுத்திருக்கிறார். மொத்தமாய் கோட்டை விட்டது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தான்.

கட்டம் சரியில்லாத சூர்யாவிற்கு மேலும் பின்னடைவாக அருண் விஜய் செய்த செயல் கடுப்பேற்றி இருக்கும். சூர்யா கிட்டத்தட்ட20 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு ட்ராஃபான படம் வணங்கான். பாலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த படம் தொடர்ந்து டேக் ஆப் ஆகவில்லை.

சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிய பின் கமிட் ஆனவர் அருண் விஜய். இந்த படம் இப்பொழுது முழுவதுமாக முடிந்துவிட்டது. 2025 பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இப்பொழுது இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து இருக்கிறார் அருண் விஜய்.

படத்தை பார்த்த மொத்த குடும்பமும் பாலாவை கண்ணீர் மல்க பாராட்டியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக விஜயகுமார் ஒரு படி மேலே சென்று அருண் விஜய்க்கு மீண்டும் சினிமா கேரியர் கொடுத்து விட்டீர்கள் என பாராட்டி தள்ளி விட்டாராம். அது மட்டும் இன்றி அருண் விஜய்யும் பாலாவுக்கு நன்றி சொல்லி டிவிட் போட்டு இருக்கிறார்.

இந்த படத்திற்கு தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடித்திருக்கிறார் அருண் விஜய். பாலா என்ன சொல்கிறாரோ அதை அப்படியே சூட்டிங் பாட்டில் செய்து முடித்து விடுவாராம் அருண் விஜய். ஆனால் சூர்யா இந்த படத்தின் கதை நல்லா இல்லை. நீங்கள் எடுக்கும் விதம் பிடிக்கவில்லை என குத்தம் சொல்லிக் கொண்டே இருப்பாராம். இப்பொழுது கங்குவா பட விமர்சனத்திற்கு இடையே சூர்யாவிற்கு இதுவும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது

Trending News