ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சம்பளத்தை அதிகபடியாக உயர்த்திய அருண் விஜய்.. கேட்டதை கொடுத்த தனுஷ்

Arun Vijay : அருண் விஜய் நடிப்பில் இப்போது வணங்கான் படம் உருவாகி இருக்கிறது. பாலா இயக்கத்தில் உருவான இந்த படம் அருண் விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தனுஷின் படத்தில் அருண் விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்பு இப்போது மதுரையில் நடந்து வருகிறது. இந்த சூழலில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தாலும் தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

அதேபோல் இட்லி கடை படத்தில் மிகவும் பவர்ஃபுல்லான கதாபாத்திரம் அருண் விஜய்க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் மிரட்டு இருந்தார். இதன் மூலம் தான் அவரது சினிமா கேரியர் மீண்டும் வலுப்பெற்றது.

சம்பளத்தை உயர்த்திய அருண் விஜய்

இதைத்தொடர்ந்து செகண்ட் இன்னிங்ஸில் இப்போது அருண் விஜய் கலக்கி வருகிறார். இந்நிலையில் இட்லி கடை படத்திற்கு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார் அருண் விஜய். அதாவது இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு 8 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

வழக்கமாக இதே போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஐந்து கோடி சம்பளம் பெற்று வந்த அருண் விஜய் இப்போது மூன்று கோடி அதிகமாக சம்பளம் பெற்று இருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்ததால் தனுஷும் இதற்கு சம்மதித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தனுஷ் இட்லி கடை படத்தின் ஷூட்டிங்கில் இடம்பெற்ற போட்டோ வெளியாகி இருந்தது. அதில் மிகவும் இளமையாக 20 வயது பையன் போல் இருந்தார். ஆகையால் பிளாஷ்பேக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News