திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மணிரத்னம் படத்தையே ரிஜெக்ட் பண்ணிய அருண் விஜய்.. உங்க போதைக்கு நான் ஊறுகாவானு பிடித்த ஓட்டம்

Maniratnam : மணிரத்னம் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என பலர் க்யூவில் உள்ளனர். ஆனால் தக் லைஃப் படத்தில் அருண் விஜய்யை நடிக்க கூப்பிடும் அவர் வர மறுத்து விட்டாராம். இதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.

கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடிக்க உள்ளனர். திரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார்.

துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகியதால் சிம்பு அவருக்கு பதிலாக நடிக்கிறார். ஆனால் சிம்பு இந்த படத்தின் உள்ளே வந்தவுடன் ஜெயம் ரவி விலகிவிட்டார். இப்போது அருண் விஜய்யை கூப்பிட்டதற்கு அவரும் மறுப்பு தெரிவித்து விட்டார்.

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த அருண் விஜய்

ஏனென்றால் இப்போது அவர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அருண் விஜய் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார். இப்படம் கண்டிப்பாக அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

இந்த சமயத்தில் மணிரத்னம் படத்தில் நடித்தால் பத்தோடு பதினொன்றாய் தான் அருண் விஜய் தெரிவார். ஏற்கனவே அதே போல் தான் பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்ததால் விக்ரம், ஜெயம் ரவி போன்றோருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதை மனதில் வைத்துக் கொண்டுதான் அருண் விஜய் சின்ன கேரக்டர் ரோல் எல்லாம் பண்ண முடியாது என கூறிவிட்டார். இதனால் வேறு நடிகரை இப்போது தக் லைஃப் படக்குழு அலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது.

Trending News