ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சும்மா கிளப்பிவிடாதீர்கள்.. சிவாவுடன் ஏற்பட்ட மோதலை வெளிப்படையாகச் சொன்ன அருண்விஜய்

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மற்ற நடிகர்களை பொறாமைப்படும் அளவிற்கு செய்துள்ளது. டாக்டர், டான் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி 100 கோடி வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளியானபோது அருண் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தில் போடப்பட்ட பதிவு சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அதாவது நீ எல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா, தமிழ் ஆடியன்ஸுக்கு தெரியும் திறமைக்கு மட்டும் தான் இங்க மதிப்பு கொடுப்பார்கள் என்று ஒரு பதிவு அருண் விஜய் டுவிட்டர் பக்கத்தில் போடப்பட்டிருந்தது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பொங்கி எழுந்த அருண் விஜய்யை விமர்சித்த வந்தார்கள்.

அதன்பிறகு அருண்விஜய் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை யார் போட்டார்கள் என தெரியவில்லை இது முற்றிலும் தவறான செய்தி என பதிலளித்திருந்தார். இந்நிலையில் அருண் விஜய்யின் மகன் அர்ணவ் ஓ மை டாக் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனது மகனின் பிறந்த நாளுக்காக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு சிவகார்த்திகேயனும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, உன் கேரியரிலும், படிப்பிலும் இதேபோன்ற கவனம் செலுத்த என வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்.

இந்தப் பதிவினால் அருண் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது ஒரு செய்தியாளர் சிவகார்த்திகேயனுக்கும், உங்களுக்கும் என்ன பிரச்சினை என கேட்டிருந்தார்.

எனக்கும், சிவகார்த்திகேயனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அதை கிளப்பி விட்டதே நீங்கள்தான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். தொழில் ரீதியாகவும் நண்பர்களாக இருந்து வருகிறோம். நீங்கள் தான் இதுபோன்ற தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி விடுகிறீர்கள் என அருண் விஜய் கூறியுள்ளார்.

Trending News