வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பொங்கல் ரேசில் திடீரென இணைந்த அருண் விஜய்.. ரஜினியால் அடித்த லக்

Arun Vijay: அடுத்த வருடம் பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் மோதிக்கொள்ள இருப்பதால் ரசிகர்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து, அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படமும் இந்த ரேஸில் இருக்கிறது என செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை.

லால் சலாம் படத்தை எப்படியாவது பொங்கல் ரேஸில் சேர்த்து விட வேண்டும் என்று லைக்கா நிறுவனம் ரொம்பவும் முயற்சி செய்தது. கடந்த வாரம் வரைக்கும் இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று தான் செய்திகள் உலா வந்து கொண்டிருந்தது. தனுஷ், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ரஜினி காந்த் ஒரே நாளில் மோதிக்கொள்ள இருப்பதால் ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.

பொங்கல் ரேசில் திடீரென இணைந்த அருண் விஜய்

ஆனால் லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீசாகாமல் போனது யாருக்கு சாதகமாக இருந்ததோ இல்லையோ, அருண் விஜய்க்கு சாதகமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில், சத்தமே இல்லாமல் அருண் விஜய் நடித்த முடித்த இன்னொரு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

Also Read:அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

இயக்குனர் ஏ.எல் விஜய் நீண்ட வருடங்களுக்கு பிறகு கொடுக்கும் ரீ என்ட்ரி படம் தான் மிஷன் 1. இந்த படத்திற்கு முன்பு அச்சம் என்பது இல்லையே என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் மூலம் நடிகை ஏமி ஜாக்சன் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் டீசர் வெளியிட்டு இருக்கின்ற நிலையில், லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாததால் லைக்கா நிறுவனம் மிஷன் 1 படத்தை ரிலீஸ் செய்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க கொலை தண்டனை கைதிகள் தங்கி இருக்கும் சிறைச்சாலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனிடையே அப்பா மகள் சென்டிமென்ட் காட்சிகளும் கலந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read:குதிரை மாதிரி விழுந்து எழுந்திருத்து ஓடும் 5 நடிகர்கள்.. கோடிகளில் கடன் இருந்தும் அசராத சிவகார்த்திகேயன்

Trending News