சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

யார் கையிலும் சிக்காத தமிழ் ராக்கர்ஸ்.. அதிரடி விசாரணையில் அருண் விஜய்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அருண் விஜய் இன்னும் 4,5 படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஒரு இணைய தொடர்களிலும் அருண் விஜய் நடித்துள்ளார்.

அதாவது சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஒன்று தமிழ் ராக்கர்ஸ். புது படங்கள் திரையரங்குகளில் வெளியான உடனே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் அந்த படங்கள் வெளியாகிறது. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதைத் துப்பறிய பல விசாரணைகள் நடத்தினாலும் அது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. இதை பற்றி தற்போது ஒரு வெப் தொடராக இயக்குனர் அறிவழகன் இயக்கி வருகிறார். அறிவழகன் இதற்கு முன்னதாக ஈரம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தொடரில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மேலும் ஏவிஎம் நிறுவனம் இத்தொடரை தயாரிக்கிறது. மேலும் தமிழ் ராக்கர்ஸ் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இன்று காலை இப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது. அதில் பல தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதை விசாரணை செய்கிறார் அருண் விஜய். மேலும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தமிழ் ராக்கர்ஸ் இல் படம் வெளியாகும் என்ற குரல் கேட்கிறது.

மேலும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் இன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை யாரிடமும் சிக்காமல் தண்ணி காட்டி வரும் தமிழ் ராக்கர்ஸ்யை அருண் விஜய் கண்டுபிடிக்கிறார் என்பதை இந்த தொடரில் காணலாம். ஆனால் இதுவும் வெளியாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் போட்டுவிடுவார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் ராக்கர்ஸ் ட்ரைலர்

Trending News