மணிரத்தினம் மீண்டு வரணும் மீண்டு வரணும் என பலரும் கூவிக் கொண்டிருக்கையில் செக்கச்சிவந்த வானம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய கேங்ஸ்டர் அவதாரத்தை களமிறக்கி பேசியவர்கள் முகத்தில் கரியைப் பூசினார்.
மணிரத்னம் படங்கள் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் வசூல் செய்வதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. பெரிய அளவு வசூல் கொடுக்காத இவரை ஏன் பெரிய இயக்குனர் என கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியும் இருந்தது.
அதற்கு தகுந்தார்போல் அவர் இயக்கிய சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமில்லாமல் வெறும் அவார்டு வாங்கும் படங்களாகவே இருந்ததால் ரசிகர்களும் ஒரு கட்டத்தில் சலிப்படைந்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் மாற்றிய படம்தான் செக்கச்சிவந்த வானம். அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து பக்கா கேங்ஸ்டர் படத்தை களமிறங்கி வெற்றி கண்டார் மணிரத்னம். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை இருந்ததால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதிலும் அருண் விஜய் நடித்த தியாகு கதாபாத்திரம் செம ஸ்டைலிஷ் ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதல் முதலில் ஒப்பந்தமானவர் மலையாள நடிகர் பகத் பாசில் தானாம்.
கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்தில் இருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை பகத் பாசில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அது வேறு ஒரு பரிமாணத்தில் மிரட்டலாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.