ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

லண்டனாக மாறிய பின்னி மில்.. ஒரு வழியாக அருண் விஜய்யால் வந்த விடிவுகாலம்

பிரிட்டிஷ் காலத்தில் ஆலையாக செயல்பட்ட பின்னி மில் இப்போது தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும் தளமாக மாறி உள்ளது. பல படங்களில் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. ரஜினியின் சிவாஜி படத்தில் இடம்பெற்ற பில்லா ரங்கா பாஷா தான் என்ற பாடலும் இங்குதான் எடுக்கப்பட்டது.

மேலும் பிரம்மாண்டமான கோட்டை, பாழடைந்த மாளிகை மற்றும் ஜெயில் ஆகிய லொகேஷனுக்கு இங்கு தான் பலரும் வருகிறார்கள். ஆனால் இது பழங்காலத்தில் அமைக்கப்பட்டது என்பதால் இப்போது பராமரிப்பு இல்லாமல் மிகவும் பாழடைந்து போய் பின்னி மில் காணப்படுகிறது.

Also Read : சண்டைக் காட்சிகள் அருண் விஜய்க்கு ஏற்பட்ட பலத்த காயம்.. ரசிகர்களை கலங்க வைத்த வைரல் புகைப்படம்

இப்போது அருண் விஜயால் இந்த பின்னி மில் லண்டன் போல மாறி உள்ளது. அதாவது ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக தத்ரூபமாக பின்னி மில்லை மாற்றி வடிவமைத்து உள்ளனர்.

இதனால் பாழடைந்து காணப்பட்ட பின்னி மில் பளபளவென்று ஜொலிக்கிறது. இப்பொழுது பின்னி மில்லில் எங்கே பார்த்தாலும் ஒரே வெள்ளைக்காரர்கள் தான். ஏனென்றால் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வெள்ளைக்காரர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளார்களாம்.

Also Read : அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த உதயநிதி.. நல்லவேளை நடிக்கல சாமி, இயக்குனர் காணாம போய்ருப்பாரு

அருண் விஜய்யின் படத்தில் சண்டைக் காட்சிகளுக்காக வெளிநாட்டில் இருந்த ஆட்கள் வரவைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் பெரும் அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்வளவு வருடமாக பல பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு இங்கு நடந்தாலும் இந்த கட்டிடங்களில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. ஆனால் அருண் விஜய் மற்றும் ஏ எல் விஜய் என இரண்டு விஜயால் பின்னி மில்லுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

Also Read : அருண் விஜய்க்கு பதில் வில்லனாக களமிறங்கும் ஹீரோ.. சிரிப்பு மூட்டும் செட்டாகாத முகம்

Trending News