வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூர்யாவை ஓரம் கட்ட வரும் அருண் விஜய்.. கடைசி 5 படத்தில் வாங்கிய சம்பளத்தை கேட்டா தலை சுத்துது

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து அவருடைய வாடிவாசல் திரைப்படத்திற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படி நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவர் பிசியாக இருக்கிறார்.

இந்த சூழலில் இவரை ஓரம் கட்டும் அளவுக்கு சைலன்டாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90களில் தன் திரைபயணத்தை ஆரம்பித்த இவருக்கு சினிமாவில் பல வருடங்கள் கடந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத இவர் கடின உழைப்பை போட்டு நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

Also read: அதிக நேரம் ஓடியதால் டெபாசிட் இழந்த 5 படங்கள்.. 4 மணி நேரம் கொலையாய் கொன்ற படம்

அதன் பலனாக இப்போது அவருடைய மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. அதிலும் அவர் கடைசியாக நடித்த ஐந்து முக்கிய திரைப்படங்கள் அவரை உச்சாணி கொம்புக்கே கொண்டு சென்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய சம்பளமும் இப்போது தாறுமாறாக உயர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் அஜித்துடன் அவர் இணைந்து நடித்த என்னை அறிந்தால் படம் அவருக்கான திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படத்தில் அவர் வாங்கிய சம்பளம் 10 கோடி. அதை தொடர்ந்து குற்றம் 23 படத்திற்காக அவர் 15 கோடி சம்பளம் பெற்றார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் படத்தில் அவருக்கு 20 கோடியாக சம்பளம் உயர்த்தப்பட்டது.

Also read: கமலை நம்பி தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட 5 தயாரிப்பாளர்கள்.. திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட லிஸ்ட்

இப்படியாக உயர்ந்து கொண்டிருந்த அவருடைய சம்பளம் தடம் படத்தில் 25 கோடியாகவும், மாபியா படத்தில் 35 கோடியாகவும் மாறியது. இந்த ஐந்து படங்களுமே அருண் விஜய்யை வேறொரு கோணத்தில் மக்கள் முன் எடுத்துக்காட்டியது. அதை தொடர்ந்து அவருக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளும் வர தொடங்கியது. அதனாலேயே இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் அச்சம் என்பது இல்லையே, வணங்கான் படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலும் டாப் ஹீரோவான சூர்யா நடிக்க இருந்த படங்களை இவர் கைப்பற்றி இருப்பது இவருக்கான ஒரு முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது. எப்படி என்றால் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் இப்போது அருண் விஜய் கைக்கு மாறி இருக்கிறது. அதை தொடர்ந்து சூர்யா ஹரியுடன் இணைய இருந்த அருவா படத்திலும் அருண் விஜய் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அவன் இவன் படத்தில் நடிக்க இருந்த அண்ணன், தம்பி நடிகர்கள்.. பாலா சூழ்ச்சி தெரியாமல் காத்து கிடந்த சோகம்

Trending News