VijayKanth – Arun Vijay : விஜயகாந்தின் இறப்பு பேரிழப்பாக இப்போது சினிமா துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்த அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
ஆனால் சிலரால் கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு வர முடியாத நிலையில் அவரின் நினைவிடத்திற்கு வந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அருண் விஜய் இன்று கேட்டனின் நினைவு இடத்திற்கு வந்து தனது மரியாதையை செலுத்தினார். படத்தில் சண்டை பயிற்சி மேற்கொள்ளும் போது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தான் விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் அருண் விஜய்யால் கலந்து கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து விஜய் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது பல நடிகர்கள் ரஜினி மற்றும் கமலை பார்த்த சினிமாவிற்கு வந்திருப்பார்கள். ஆனால் தான் விஜயகாந்த் சாரை பார்த்து தான் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டேன்.
Also Read : விஜய்யை முதலமைச்சராக்க திட்டம் தீட்டிய விஜயகாந்த்.. சுக்கு நூறாக நொறுக்கிய பிரேமலதா
அவருடைய சண்டைக்காட்சியை பார்த்து தான் வியந்து ரசித்திருக்கிறேன். அவரின் சண்டை காட்சிகளில் எப்போதுமே தனித்துவம் இருக்கும். அதன்படி சினிமாவில் என்னுடைய சண்டை காட்சிகளும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் கேப்டன் சினிமாவுக்காக பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்.
அந்த வகையில் இனி என்னுடைய படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்குமே ஒரே சாப்பாடு தான் என கேப்டன் சமாதியில் தில்லானா சபதத்தை அருண் விஜய் எடுத்து இருக்கிறார். இப்போது உள்ள நடிகர்கள் பலரும் இதை செய்வார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் அருண் விஜய் இப்போது விஜயகாந்த் பாணியை பின்பற்றுவதாக சொன்னதற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Also Read : விஜயகாந்த்துக்கும், வடிவேலுக்கும் இதுதான் வித்தியாசம்.. தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த மாமன்னன்