திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஷங்கரின் வாரிசு என்பதால் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?. அருண் விஜய்யின் பதில்

அருண் விஜய்யின் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் சோனி ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகி உள்ளது. இந்தத் தொடரை ஏவிஎம் தயாரிக்க அறிவழகன் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் தமிழ் ராக்கர்ஸை அச்சுறுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அருண் விஜய் இந்த வெப் தொடர் சார்பாக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அதில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளால் மற்ற நடிகைகளை காட்டிலும் இவருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது போல் தோன்றுகிறதா என அருண் விஜய்யிடம் கேள்வி வைக்கப்பட்டது.

Also Read :தமிழ் ராக்கர்ஸ்-க்கு வலை விரித்து விஜய்யை அசிங்கப்படுத்திய படக்குழு.. அப்படி என்னதான் கோவமோ!

ஏனென்றால் அருண் விஜய்யும் சினிமா பின்புலத்தில் இருந்த வந்தவர்தான். இதுபற்றி அவர் கூறுகையில், என் படங்களில் என் அப்பாவின் சாயல் இருந்தாலும், எந்த இடத்திலும் என் அப்பாவின் பெயரை நான் பயன்படுத்தியது இல்லை.

என் அப்பாவும் உனக்கு வேண்டியதை நீதான் தேடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லக்கூடிய ஆள். இதனால் நான் என்னுடைய திறமையால் மட்டுமே இந்த இடத்திற்கு வர முடிந்தது. மேலும் திரை வாரிசுகள் என்பதால் எங்கள் தந்தையின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் அதிகம் உள்ளது.

Also Read :செம ஸ்டைலா வேற மாதிரி ஆன ஷங்கர் மகள்.. புகைப்படத்தை பார்த்து காதலை சொல்லும் ரசிகர்கள்

அதுமட்டுமன்றி வாரிசுகள் என்பதால் சினிமாவில் சுலபமாக வாய்ப்பு கிடைத்தாலும் ரசிகர்களுக்கு தங்களை பிடித்திருந்தால் மட்டுமே அடுத்த படத்தைப் பார்க்க வருவார்கள். அந்தவகையில் அதிதி சங்கருக்கு பல திறமைகள் உள்ளது.

மேலும் அதிதி ஷங்கருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என அருண் விஜய் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் யானை படத்தைத் தொடர்ந்து அருண் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதனால் மிக விரைவில் திரையரங்கு அல்லது ஓடிடி தளத்தில் அவரது படங்கள் வெளியாகவுள்ளது.

Also Read :டாப் ஹீரோவுக்கு வலைவிரிக்கும் அதிதி சங்கர்.. அம்மணி உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லையா!

Trending News