வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஓயாத பிரச்சனை.. கடைசியில் அருண் விஜய் படத்திற்கு வந்த நிலைமை

ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் அருண் விஜய் வில்லனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து அவர் காட்டில் மழைதான். தற்போது அருண் விஜய்யின் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் தற்போது யானை படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே யானை படத்தால் பல பிரச்சனைகள் அருண்விஜய் சந்தித்தார்.

இதனால் படம் இன்னும் ரிலீசாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் அருண் விஜய்க்கு மிகப்பெரிய தலைவலி இருந்து வருகிறது. ஏனென்றால் யானை படத்தை வைத்த அருண் விஜய் மிகப்பெரிய திட்டம் ஒன்று போட்டு வைத்துள்ளாராம்.

அதாவது யானை படத்தின் ரிலீசுக்கு பிறகு அருண் விஜய்க்கு நிறைய ஸ்கோப் இருக்கும் என எதிர்பார்க்கிறார். இதனால் தற்போது சம்பளத்தை கூட உயர்த்திவிட்டார். மேலும் யானை படத்திதை தவிர அருண் விஜய்க்கு இன்னும் நான்கைந்து படங்கள் வரிசையில் உள்ளது.

ஆனால் யானைப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால் மற்ற படம் எதுவும் ரிலீசாகாமல் உள்ளது. மேலும் சமீபத்தில் யானை படத்தின் பிரஸ்மீட்டில் இயக்குனர் ஹரி சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியதால் அதுவும் சர்ச்சையாக வெடித்தது.

இவ்வாறு யானை படத்திற்கு தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டிருப்பதால் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்துவிடலாம் என்ற யோசனையில் அருண்விஜய் உள்ளாராம். ஏனென்றால் தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிடுகிறது. இதனால் இவர்கள் வெளியிட்டால் எந்த பிரச்சனையும் வராது என்ற முடிவில் அருண்விஜய் உள்ளார்.

Trending News