வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அருண் விஜய் லைன் அப்பில் இருக்கும் அடுத்த 5 படங்கள்.. சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு போடும் அடி

அருண் விஜய் ஈசியாக சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்காக இன்னமும் போராடி வருகின்ற ஒரு நடிகர். அதற்காக இவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தி அடுத்தடுத்து மேலே வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடந்தாண்டு இரண்டு படங்கள் வெளிவந்தது. அதில் யானை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை கொடுத்தது.

பின்பு சினம் என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி படமாக அமையவில்லை. அதைத் தொடர்ந்து இப்பொழுது இவர் ஐந்து படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இதனால் இவர் கொஞ்சம் கூட நேரமில்லாமல் ரொம்பவும் பிஸியாக நடித்து வருகிறார். முக்கியமாக அந்த படங்களை எல்லாம் வெற்றி படமாக கொடுத்தே ஆக வேண்டும் என்று ரொம்பவும் மெனக்கெட்டு ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து நடித்து வருகிறார்.

Also read: அருண் விஜய் படத்தில் நடித்த 2 நடிகர்கள்.. 3 பேருமே ஒரே குடும்பம்

அந்த வகையில் இப்பொழுது இவர் நடிக்க இருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம். தற்போது பார்டர் என்ற படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் அருண் விஜய், டிஐஏ ஏஜெண்டாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியவர் அறிவழகன் வெங்கடாசலம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே குற்றம் 23 என்ற திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. அதே மாதிரி இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக அமையப் போகிறது.

அடுத்ததாக அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக மாறும்.

Also read: ரஷ்ய ஸ்டண்ட் மாஸ்டரை அசர வைத்த அருண் விஜய்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அடுத்ததாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்தது. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சூர்யா இதிலிருந்து விலகி விட்டார். இப்பொழுது சூர்யாக்கு பதிலாக அருண் விஜய் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். இவர்கள் சேரும் இந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றி கூட்டணியாக தான் அமையும்.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அத்துடன் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த குற்றம் 23 என்ற படத்திற்கு பார்ட் 2 வேலைகளிலும் இறங்கி உள்ளார். இப்படி தொடர்ந்து அருண் விஜய்க்கு இந்த வருடம் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அதே மாதிரி இந்த படங்கள் அனைத்தும் இவர் நினைத்தபடி வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 7 வருடம் கழித்து ரிலீஸுக்குத் தயாராகும் அருண் விஜய் படம்.. டிரெய்லரே செம ஹிட் ஆச்சு, இப்போ படம் ஹிட் ஆகுமா?

Trending News