புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வெறிபிடித்த சிங்கமாக வேட்டையாடும் அருண் விஜய்.. மிரட்டும் பாலாவின் வணங்கான் டீசர்

Vanangaan Teaser: ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் உருவாகி வருகிறது. சூர்யாவை வைத்து முதலில் ஆரம்பித்த இப்படம் சிறு மன வருத்தத்தின் காரணமாக அருண் விஜய் கைக்கு சென்றது. அதை தொடர்ந்து இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Also read: விஜயகாந்த் பாணியை பின்பற்ற போகும் அருண் விஜய்.. கேப்டன் சமாதியில் எடுத்த தில்லானா சபதம்

அதைத்தொடர்ந்து ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே சோசியல் மீடியாவில் வணங்கான் படத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர். இப்படி பெரும் ஆர்வத்தை தூண்டி இருந்த அந்த டீசர் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இது கன்னியாகுமரி மீனவர்களின் கதை என்பது நாம் அறிந்தது தான்.

அதை குறிப்பிடும் வகையில் டீசரின் ஆரம்பத்திலேயே கன்னியாகுமரி கடல் தான் காட்டப்படுகிறது. அதை தொடர்ந்து திருவள்ளுவர் சிலையும், அருண் விஜய்யின் வாழ்க்கை முறையும் என டீசர் விரிகிறது. ஒவ்வொருவரையும் விரட்டி விரட்டி வேட்டையாடும் அருண் விஜய் காட்சிக்கு காட்சி வெறித்தனமாக நடித்திருக்கிறார்.

Also read: குடும்பங்கள் கொண்டாடிய மிஷன் சாப்டர் ஒன்.. அயலான் மில்லரை தகர்த்தெறிந்த அருண் விஜய்யின் தந்திரம்

அதேபோல் ஹீரோயின் வரும் காட்சி, போலீசாக வரும் சமுத்திரகனி என டீசர் பரபரப்பாக நகர்கிறது. அதற்கு பலம் சேர்ப்பது போல் பின்னணி இசை அதிர வைத்துள்ளது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த டீசர் முழுவதும் அருண் விஜய்யின் ஆதிக்கம் தான் இருக்கிறது. நிச்சயம் இப்பட ரிலீசுக்கு பிறகு அவருடைய மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று விடும்.

Trending News