வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வெளில வந்த உடனே டும் டும் டும்.. இவ்வளவு தூரம் போயாச்சு.. இன்னும் ஏன் இப்படி ஒரு நாடகம்

கடந்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனாவும், நடிகர் அருணும் காதலித்து வருவதாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து இருவரும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்கள். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சீசனில் சுமால் ஹவுஸ்,பிக் ஹவுஸ் என இருந்த நிலையில், இந்த சீசனில் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் டீம், பெண்கள் டீம் என இரு டீம்களாக பிரித்து பிக் பாஸ் ஏண்டா இந்த தப்பை செஞ்சோம் என்று திண்டாடி வருகிறது. சரி வைல்ட் கார்டு contestants வந்த பிறகாவது ஆட்டம் சூடுபிடிக்கும் என்று பார்த்தால், அதுவும் இல்லை.. இதற்க்கு சீனியர் contestants-ஏ பரவா இல்லை என்று தான் தோன்றுகிறது.

உண்மையை உடைத்த அருண்

சமீபத்தில் கடந்து வந்த பாதையில் கூட தனது ஹார்லி குயின் அர்ச்சனாவை பற்றி ரொம்ப பெருமிதமாக கூறி flying kiss எல்லாம் கொடுத்தார். அதிலே பயங்கரமாக அர்ச்சனா இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். அதுமட்டுமின்றி, அருண் அமைதியாக இருந்தபோது, அவரை எல்லோரும் புல்லி செய்த நேரத்தில் பொங்கி எழுந்து அருணுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு வோட்டு வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் அர்ச்சனாவின் பிறந்தநாள் நடந்து முடிந்துள்ளது. அர்ச்சனாவின் பிறந்தநாளுக்கு அருண் கேமரா முன் நின்று, ஹாய், நீ நல்லா இருப்ப என்று நம்புகிறேன், நானும் இங்கே நன்றாக இருக்கிறேன், நான் இந்த வாரம் கேப்டனாகி இருக்கிறேன். இன்று உன்னுடைய பிறந்த நாள், இந்த நாளில் அனைத்து விதமான வெற்றியும் உனக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள்.. “ச்ச.. என்ன லவ்.. நமக்கு இப்படி ஒன்னு அமையமாட்டிங்குதே.. என்றும், ‘வெளில வந்ததும் டும் டும் தான் போல..’ ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News