புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கார்த்திக்காக காத்திருந்த அருண்ராஜா காமராஜ்.. இப்ப தான் இதுக்கு சரியான நேரம்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் மாறுபட்ட நடிப்பில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் ரீமேக் ஆகும்.

நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை மிகவும் தைரியமாக வெளிப்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இப்படி ஒரு படைப்பை கொடுத்திருக்கும் அருண்ராஜா காமராஜ் அடுத்தது எந்த மாதிரியான திரைப்படத்தை இயக்க போகிறார் என்று தற்போது பலருக்கும் ஆவல் எழுந்துள்ளது.

அப்படி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.

இதுபற்றி கடந்த 2020ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அப்போது கார்த்தி சில திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில் அருண் ராஜாவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்க சென்றுவிட்டார்.

அதனால் இப்போது தான் இந்த திரைப் படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. இப்படம் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஒரு முக்கிய கதையாக எடுக்கப்பட இருக்கிறதாம்.

இந்தப் படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிப்பதற்காக பிரபல தெலுங்கு நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கார்த்தி தற்போது ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதி, கார்த்தி இணைந்து நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் கார்த்தி, அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிறிது காலதாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News