சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கொல வெறியோடு சுற்றும் அருண் விஜய்.. படத்தை ஓட்ட இதுதான் வழியா சார்

ஒரு காலத்தில் அருண் விஜய் நடித்த படங்கள் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. கண்டிப்பாக இவர் வர மாட்டார் சினிமாவில் நிரந்தரமாக இருக்க மாட்டார் என்றுதான் மக்களும் நினைத்தார்கள். ஆனால் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து வேற லெவல் சென்றுவிட்டார்.

இந்த வெற்றிக்கு யார் காரணம்? முக்கியமாக இயக்குனர்கள் தான் அதே நேரத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் கதாபாத்திரம் ஹேர்ஸ்டைல் என நிறைய இருக்கிறது. முக்கியமாக வன்முறை. முற்றிலும் வன்முறையாக உள்ள படங்கள் மட்டும்தான் எடுக்கிறார்கள்.

என்னை அறிந்தால் படத்தில் மிகக்கொடுமையான வில்லனாக நடித்து பேர் பெற்றார். பின்னர் வந்த குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், மாபியா என அனைத்து படங்களுமே வன்முறையை தூண்டும் படங்கள்தான். அருண் விஜய் நடித்த பாக்ஸர் படத்தின் கதை லீக் ஆனது. அதுவும் முழு வன்முறைதான். ஏன் இந்த தேர்வு?

இப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்தால் மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று வன்முறையை மட்டுமே படமாக எடுத்து ஓட்டுகிறார்கள். ஏன் சாதாரணமான படங்களில் நடித்தால் படங்கள் வெற்றி பெறாதா? வீடியோ கேமில் வரும் கதாபாத்திரங்கள் போல மிக கொடுமையான ஹேர்ஸ்டைல், கத்தி, கொலை, கொள்ளை என முற்றிலும் வன்முறைதான்.

இதனை தவிர்த்து மற்ற வகையான படங்களிலும் கவனம் செலுத்தலாம். நல்ல கதை, காதல், காமெடி என பலவகையான படங்கள் உள்ளன. ஆனால் இவர்கள் எடுக்கும் படங்கள் அனைத்தும் மக்களுக்காக அல்ல. OTTக்காக மட்டும் தான் ஏனென்றால் OTTஇல் இல்லாத கலவரமே இல்லை. அந்த அளவுக்கு OTT மோசமாக உள்ளது. அதில் நன்றாக காசும் பார்க்கலாம்.

இவர்கள் செய்யும் வன்முறையை பார்த்து பலபேர் புள்ளிங்கோ மாதிரி மாறியே வருகிறார்கள். கெட்டபுக்கு தகுந்த மாதிரி குற்றமும் நடக்குது. இது எங்க கொண்டு போய் முடியப் போகுதோ தெரியல.

Trending News