பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் தற்போது தான் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் வெற்றி கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே குவிந்து கொண்டிருக்கிறது. ஹீரோ, வில்லன் என மாறி மாறி மாஸ் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அருண்விஜய்யின் வளர்ச்சியை பார்த்த ஒரு குறிப்பிட்ட நபர்கள் அருண்விஜய்யின் பெயரை வைத்து இளம் பெண்களை ஏமாற்றி வரும் செய்தி சமீபத்தில் தான் வெளியில் வந்துள்ளது.
அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்றுக்கு நடிக்க ஆர்வம் உள்ள இளம் பெண்கள் தேவை என்ற பொய் விளம்பரம் ஒன்று எப்படியோ அருண்விஜய் கண்ணில் பட்டுவிட்டது.
இதனால் பதறிப்போன அருண் விஜய் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற பொய்யான அறிவிப்புகளில் பெண்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள் என அதிகாரப்பூர்வமாக தன்னுடைய பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் பெயர்களில் மோசடிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னரே கவனித்ததால் அருண்விஜய் தப்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.