என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக மாறிய அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அடுத்ததாக எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் சினம்.
சமீபகாலமாக அருண் விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே முன்னணி நடிகர்களின் படங்களை போல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் முதல் நாள் வசூலும் நல்ல படியாகவே இருந்து வருகிறது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள அருண் விஜய் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களின் கதையை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான சினம் படத்தின் பாடல் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற படங்களை இயக்கிய ஜி என் ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார்.
சினம் படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கட்டு மஸ்தான உடற்கட்டுடன் போலீஸ் உடை அணிந்தாலே தனி கெத்து தான். படமும் அதே போல் கெத்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் வெளியாகும் சினம் படத்தின் விளம்பரங்களில் ஈடுபட்டுள்ள அருண் விஜய் அடுத்ததாக சினம் பட நாயகி பலக் லால்வணி என்பவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.