அருண் விஜய் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் OTTக்கு கொடுக்கப் போவதாக சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போன அருண் விஜய் அப்படி செய்ய வேண்டாம் என அவரிடம் கோரிக்கை வைத்து வருகிறாராம்.
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்திற்கு மார்க்கெட் உயர்ந்ததோ, இல்லையோ அருண் விஜய்யுடைய கேரியர் செம பிக்கப் ஆகி விட்டது. வில்லன், ஹீரோ என கலந்து கட்டி அடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மிகப் பெரிய நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க அனைவரும் அணுகுவது அருண் விஜய்யை தான். இருந்தாலும் அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் தனக்குரிய இடத்தை பிடித்து விட்டார்.
அது மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களை காட்டிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வசூலும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் அருண் விஜய் தன்னுடைய சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என பெரிய அளவில் நம்பிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் பார்டர்.
ஏற்கனவே அருண்விஜய்க்கு குற்றம் 23 என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அறிவழகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் கூட இதன் டைட்டில் வெளியீடு மிக பிரமாண்டமான முறையில் நடந்தது. தற்போது கொரானா பரவல் அதிகமாக இருப்பதால் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படுவதற்காக சாத்தியக்கூறுகள் இல்லை என தயாரிப்பாளர் முடிவு எடுத்து அந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு விடலாம் என முடிவு செய்துள்ளாராம்.
ஆனால் இந்த படம் தன்னுடைய கேரியரை மாற்றும் என நம்பிக்கொண்டிருந்த அருண்விஜய்க்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை எனவும், வெயிட் செய்து பார்க்கலாம் எனவும் கோரிக்கை வைத்து வருகிறாராம்.