வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெண்பா கழுத்திற்கு வந்த அருவாள்.. மௌனராகம் கதை போல பாரதிகண்ணம்மாவில் நடந்த ட்விஸ்ட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இப்போது இந்த தொடர் கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் எதிர்பாராத ட்விஸ்ட்டாக வெண்பாவின் முகத்திரை கிழிந்து எல்லா உண்மையும் பாரதிக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் வெண்பா கன்னத்தில் பல்லார் என்று பாரதி அறை கொடுத்துவிட்டு, இனிமே என் முகத்திலேயே முழிக்காத என்று கூறிவிட்டு செல்கிறார். இதைத்தொடர்ந்து வெண்பாவை யார் கட்டிக் கொள்வார்கள் என்று அவரின் அம்மா ஷர்மிளா புலம்புகிறார். உடனே ரோகித் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்கிறார்.

Also Read :மாயாண்டி குடும்பத்தாரை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அண்ணன் தம்பி பாசமுன்னா இப்படித்தான் இருக்கணும்

ரோகித்தை திருமணம் செய்து கொள்ள வெண்பா மறுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷர்மிளா கோயில் உள்ள அருவாவை எடுத்து வெண்பாவின் கழுத்தில் வைக்கிறார். இன்னும் உனக்கு திமிர் போகலையா, அவரே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்றாரு உனக்கு என்ன என்று அருவாள் முனையில் ரோகித் வெண்பா கழுத்தில் தாலி கட்டுகிறார்.

ஆனால் இந்த கல்யாணத்தில் வெண்பாவிற்கு சுத்தமாக சம்மதம் இல்லை என்பது ரோகித்-க்கு தெரியும். மௌன ராகம் படத்தில் ரேவதி, மோகன் மீது விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் அதன் பின்பு அவரின் அன்பை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வார்.

Also Read :ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்த போட்டியாளர்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஆஸ்கர் நாயகி

அதேபோல் நீயும் என்னை ஏற்றுக் கொள்வாய் என வெண்பாவிடம் ரோகித் பஞ்ச் டயலாக் பேசுகிறார். மேலும் வீட்டுக்கு வந்த வெண்பா, ரோகித்துக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். இந்நிலையில் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் பழையபடி சதி திட்டத்தை தீட்டுகிறார் வெண்பா.

அதாவது பாரதியை ஏமாற்றுவதற்காக தான் இந்த குழந்தையை பெற்றுக் கொள்ள சம்மதித்தேன். இப்போதுதான் பாரதியே தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொல்லி விட்டானே, இனிமேல் எதற்கு இந்த குழந்தை என அதை அளிக்கா திட்டமிட்டுள்ளார். இதற்காக வயித்து வலி என்று கத்தி புரளுகிறார். இதன் மூலம் வெண்பா எப்போதுமே திருந்த மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.

Also Read :கோபியை விச பாம்பாக கொத்தும் காதலி.. மீட்டிங்கில் முட்டிக் கொள்ளும் சக்காளத்திகள்

Trending News