ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அருவி சீரியலுக்கு கிடைத்த பிரைம் டைம்.. பிரபல தொடருக்கு எண்டு கார்ட் போடும் சன் டிவி

Aruvi – Sun Tv : இப்போது விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களின் டிஆர்பி தான் போட்டி போட்டுக்கொண்டு முன்னணி வகிக்கின்றது. இந்நிந்லையில் இப்போது சன் டிவியில் அருவி தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடா, கார்த்திக் வாசு, அம்பிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் பிரைம் டைமில் மாற்ற சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது சன் டிவியின் அஸ்திவாரமான தொடர் முடிய உள்ளதால் அந்த நேரத்திற்கு அருவி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

சன் டிவியில் மதியம் ஒரு மணிக்கு பிரியமான தோழி என்ற சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சந்திரா பாபு மற்றும் விக்கி ரோஷன் முதன்மை கதாபாத்திரத்தில் இந்த தொடரில் நடித்து வந்தனர். கிட்டத்தட்ட 500 எபிசோடுகளை தாண்டி பிரியமான தோழி தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

Also Read : பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் யாருன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சு.. இதைவிட அசிங்கம் வேற எதுமே இல்ல

இப்போது இந்தத் தொடர் முடியும் தருவாயை எட்டி உள்ளது. எனவே பிரியமான தோழி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மதியம் ஒரு மணி ஆன பிரைம் டைமில் இப்போது அருவி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் பிரியமான தோழி தொடருக்கு பதிலாக புதிதாக ஒரு சீரியலை சன்டிவி களமிறக்க இருக்கிறது.

மேலும் சின்னத்திரையின் தளபதி என்று அழைக்கப்படும் சஞ்சீவ் மற்றும் தென்றல் தொடரின் மூலம் பிரபலமான ஸ்ருதி இருவரும் புதிய தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகையால் விரைவில் சன் டிவியில் இந்த புதிய தொடரின் ப்ரோமோ வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : பொங்கலுக்கு மோதப் போகும் 8 புது படங்கள்.. டிஆர்பிக்காக அடித்துக் கொள்ளும் நான்கு சேனல்கள்

Trending News