சினிமா ரசிகைகளுக்கு ஒரு காலத்தில் கனவு கண்ணனாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. அப்போதெல்லாம் எனக்கு அரவிந்த்சாமி போன்ற மாப்பிள்ளை தான் வேண்டும் என்று தான் கூறுவார்கள் அந்தளவிற்கு அரவிந்த் சாமிக்கு ரசிகைகள் இருந்தனர்.
பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு பாஸ்கர் ஒரு ராஸ்கல், போகன், செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை 2 மற்றும் தலைவி, வணங்காமுடி, நரகாசுரன் ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த்சாமி தனக்கு கிடைக்கும் நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது மகளுடன் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதனை ரசிகர்கள் தெரியப்படுத்தும் வகையில் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகளுடன் சைக்கிளில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.