வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரீ என்ட்ரியில் கெத்து காட்டிய அரவிந்த்சாமி.. சத்தம் இல்லாமல் கேரியர் குளோஸ் ஆன பரிதாபம்

நடிகர் அரவிந்த்சாமி இயக்குனர் மணிரத்தினத்தின் தளபதி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தம்பியாக நடித்து அடுத்த வருடமே வெளியான ரோஜா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது எனலாம். படம் ரிலீஸ் ஆகி கிட்டதட்ட 10, 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகைகளின் காதல் மன்னனாக இவர் இருந்தார்.

அதன்பின்னர் பாம்பே, இந்திரா போன்று அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்தார் அரவிந்த்சாமி . அதன்பின்னர் தமிழ் சினிமாவை விட்டு இவர் காணாமல் போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . இறுதியாக இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்த இவர் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி பிசினஸில் இறங்கி விட்டார்.

Also Read:பூசணிக்காய் உடைத்தும் ரிலீசாகாமல் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. அரவிந்த் சாமியை பிடித்து ஆட்டும் தலைவலி

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் நெகட்டிவ் கேரக்டர் ரோலில் மீண்டும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார் அரவிந்த்சாமி. அவருக்கு 2018 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை அவர் ஏற்று நடித்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

ரோஜா திரைப்படத்தின் மூலம் எப்படி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தாரோ அதேபோன்று தனி ஒருவன் மூலம் அவருடைய ரீ என்ட்ரி பயங்கர மாஸாக இருந்தது. அதன் பின்னர் பாஸ்கர் ஒரு ராஸ்கல், போகன், தலைவி, செக்கச் சிவந்த வானம் என ஒரு ரவுண்டு வந்தார் அரவிந்த்சாமி.

Also Read:அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

ரீ என்ட்ரி யில் ரொம்பவும் வேகமாக முன்னேறி வந்த அரவிந்த்சாமி சில வருடங்களிலேயே சட்டென ஓய்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படத்தின் டப்பிங் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட இவர் மொத்தமாக தன்னுடைய பெயரை சினிமா வட்டாரத்தில் கெடுத்துக் கொண்டார். அதன் பின்னர் பட வாய்ப்புகளும் வெகுவாக குறைந்துவிட்டது.

கள்ளபார்ட் ,சதுரங்க வேட்டை 2, நரகாசுரன், வணங்காமுடி போன்ற நான்கு படங்கள் தற்போது இவருக்கு ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. இவரைப் போல பயங்கர மாஸாக கம்பேக் கொடுத்த நடிகர்கள் யாருமில்லை. அப்படி ஒரு வாய்ப்பு கையில் அமைந்தும் அரவிந்த்சாமி அதை சரியாக பயன்படுத்தாமல் நழுவ விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:மணிரத்னம் அறிமுகப்படுத்திய ரத்தினக்கல்.. இளசுகளை கிறங்கடித்த அரவிந்த் சாமியின் 6 வெற்றி படங்கள்

Trending News