செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தேடிவந்த வாய்ப்பை தவறவிட்ட அரவிந்த்சாமி.. ஸ்கோர் செய்து புலம்ப வைத்த எஸ் ஜே சூர்யா

Actor Aravindswamy: ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இவர் ஏற்ற எண்ணற்ற படங்கள் வெற்றி கண்டு, மக்களிடையே சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து வரும் இவர் ஏற்க இருந்த பட வாய்ப்பு குறித்த தகவலை இங்கு காண்போம்.

அவ்வாறு தனி ஒருவன் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்து வந்த அரவிந்த்சாமி தற்போது அடுத்த கட்ட பட வாய்ப்புகளை ஏற்று வருகிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி தந்த படம் தான் மாநாடு.

Also Read: வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

டைம் லூப் கதை அம்சம் கொண்டு அமைக்கப்பட்ட இப்படத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

அவ்வாறு இருக்க, இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் முதலில் அரவிந்த்சாமி தான் நடிக்க இருந்ததாம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு, இப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அரவிந்த்சாமியின் கால்ஷீட் கேட்டாராம்.

Also Read: என்ன பொண்ணுடா இது என ஏங்க வைத்த 5 கேரக்டர்கள்.. ரசிகர்கள் கொண்டாடும் ‘குட் நைட்’ அனு

சில காரணங்களால் அதை ஏற்க முடியாமல் போனதால், படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை கண்டு நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் மிஸ் பண்ணிட்டேன் எனவும் கூறி இருக்கிறார். ஆனாலும் எஸ் ஜே சூர்யா இக்கதாபாத்திரத்தை சிறப்புற நடித்திருக்கிறார் எனவும் நெகிழ்ந்து பேசினாராம்.

தான் ஏற்க வேண்டிய கதாபாத்திரத்தை வேறு ஒருவர் நடித்ததை பெருமைப்படுத்தி பேசிய தன்மை இவரிடம் இருப்பதால் தான் இன்னும் இவர் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி மூலம் கலக்கி வருகிறார். மேலும் இத்தகைய குணமே அவரின் வெற்றிக்கு காரணம் என சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது.

Also Read: ஹீரோயினா, சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்டா.? மாவீரனில் இருந்த இடம் தெரியாமல் போன அதிதி சங்கர்

Trending News