திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஒரே மாதத்தில் வெளியாகும் ஆர்யாவின் 2 படங்கள்.. சார்பட்டாவிற்கு பின் எகிறும் மார்க்கெட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன இறுதியாக வெளியானது சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனால் தற்போது ஆர்யா நடித்துள்ள படங்களின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆர்யா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 மற்றும்ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

அரண்மனை படத்தில் ஹீரோவாகவும் எனிமி படத்தில் வில்லனாக மாறிய நடித்துள்ளதால் இந்த இரண்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் இரண்டு முடிவடைந்துள்ள நிலையில் எப்போது படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

aranmanai3-firstlook-poster
aranmanai3-firstlook-poster

ஆனால் வருகிற செப்டம்பர் மாதம் அரண்மனை 3 மற்றும் எனிமி ஆகிய இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது ஆர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் படக்குழுவினர் சற்று மன வேதனையில் உள்ளனர்.

ஏனென்றால் ஒரு படத்தில் ஆர்யா ஹீரோவாகவும் மற்றொரு படத்தில் ஆரிய வில்லனாகும் நடித்துள்ளதால் எந்த படம் வெற்றி பெறும் என்பது தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.

ஆனால் இரண்டு படங்களிலும் கதையம்சமும் ஆர்யாவின் நடிப்பும் சரியாக இருந்தால் இரண்டு படங்களுமே வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இருக்கிறது எனவும் ஒரு சில சினிமா வட்டாரம் நண்பர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த இரண்டு படங்களும் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படக்குழுவினர் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் உள்ளனர்.

Trending News