இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 22ஆம் தேதி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் சார்பட்டா பரம்பரை. இத்திரைப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பா. ரஞ்சித் அவர்களுடைய படத்தில் சமூகம் சார்ந்த செய்திகள் முக்கிய கதையாக இருக்கும்.
மக்களிடையே இருக்கும் பிரச்சனைகள் குறித்து அவருடைய கதைகள் நேர்த்தியாக அமைந்திருக்கும். அந்த வகையில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வட சென்னையில் இருக்கும் குத்து சண்டையை மையமாக வைத்து இந்த திரைப்படம் அமைந்திருக்கும். 1975 களில் உள்ள கதையை அழகாக படமாக்கி தந்திருப்பார் இயக்குனர் பா ரஞ்சித். ஆர்யா,துஷ்ரா, பசுபதி ,சபீர், ஜான் கொக்கன் போன்ற பிரபல நடிகர்கள் தங்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
இந்த படம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. இயக்குனர் அட்லி அவர்கள் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘அற்புதமான படம் எனக்கு பிடித்து இருக்கிறது ஆர்யா படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார்.
சந்தோஷ் அண்ணாவின் இசை இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது , ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் மேலும் எல்லா துறையினரும் தங்களுடைய பங்களிப்பை அற்புதமாக கொடுத்துள்ளனர்.’ ஒவ்வொரு கட்டத்திலும் அனைவரின் உழைப்பும் தெரிகிறது.
மனைவி, அம்மா, ரங்கன் வாத்தியார், அப்பா, வேம்புலி, காளி வெங்கட், கலையரசன், மஞ்சக் கண்ணன் போன்ற கதாபாத்திரங்கள் அனைவரின் நினைவிலும் நிற்கக் கூடியது. மேலும் எனக்கு “டான்சிங் ரோஸ்” கதாபாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குனர் அட்லி.
இதனால் தனது அடுத்த படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகருக்கு அட்லி வாய்ப்பு கொடுப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.