திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

வெப் சீரிஸில் களமிறங்கும் சார்பட்டா பட நடிகர்.. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படக்குழு

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெப் சீரிஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. வெப் சீரிஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், உலகளவில் புகழ்பெற்ற வெப் சீரிஸ் கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகமாகி வருகிறது.

பாலிவுட்டில் வெளியாகியுள்ள ஃபேமிலி மேன், சேக்ரட் கேம்ஸ் உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளன. அதேபோல் தமிழில் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகர் ஆர்யா புதிய ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த சீரிஸ் திரில்லர் ஜேர்னரில் உருவாக உள்ளதாம்.

arya-cinemapettai
arya-cinemapettai

ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆர்யா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து டெடி படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதன் பின்னரே வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News