வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியின் Mr X.. துணிவோடு சாகசத்திற்கு தயாரான அஜித் ஹீரோயின்

Actor Arya: எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற நினைப்பில் ஆர்யா காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார். ஆனால் அது கொஞ்சம் சறுக்கி விட்டதால் தற்போது கௌதம் கார்த்திக் உடன் கூட்டணி அமைத்து அடுத்த அதிரடிக்கு தயாராகி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த் இயக்கும் Mr X என்ற படத்தில் தான் இந்த கூட்டணி இணைந்து இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இதன் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பே வெளியானது.

Also read: தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழிக்கும் அஜித் பட நடிகை.. கண்டிஷன் என்ற பெயரில் போடும் பட்டியல்

அதைத்தொடர்ந்து இப்படத்தில் அஜித்தின் துணிவில் தெறிக்கவிட்ட மஞ்சு வாரியரும் இப்போது இணைந்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அனகாவும் இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். மேலும் வித்தியாசமான டெக்னாலஜி கொண்டு ஆக்சன் அதிரடியாக உருவாகும் இப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளிலும் படமாக்கப்பட இருக்கிறது.

ஆர்யா-கௌதம் கார்த்திக் கூட்டணியின் Mr X

arya-movie-pooja
arya-movie-pooja

அதிலும் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும் என பட குழு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சமீப காலமாக சவாலான கதாபாத்திரங்களை ஏற்று வரும் கௌதம் கார்த்திக் இப்படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் தான் நடிக்க இருக்கிறாராம்.

Also read: ஆர்யாவை ஓவர் டேக் செய்ய வரும் டான்சிங் ரோஸ்.. வேற லெவலில் உருவாகும் கூட்டணி

அவருக்கு இணையாக ஒரு கனமான கதாபாத்திரத்தில் மஞ்சுவாரியரும் அசத்த இருக்கிறார். துணிவு படத்திற்குப் பிறகு பல பட வாய்ப்புகள் வந்தும் அதையெல்லாம் ஏற்காமல் இருந்த இவர் இப்படத்தின் கேரக்டருக்காகவே இதில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

Mr X படத்தின் பூஜை

gowtham-karthik-arya
gowtham-karthik-arya

அந்த வகையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் படக்குழு படத்தின் பூஜையையும் அமோகமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் மஞ்சு வாரியர் இப்படத்தில் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

Also read: மொக்க படத்தின் 2ம் பாகத்திற்கு சண்டை போடும் லிங்குசாமி.. ஆர்யா வேண்டாம் அந்த ஹீரோ தான் வேணுமாம்

Trending News