திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆர்யாவின் ஹாலிவுட் ரீ-மேக் டெடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நீங்களும் ஹாட்ஸ்டார் போயிட்டீங்களா பாஸ்!

2012ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற டெட் படத்தின் தமிழ் ரீமேக்கான டெடி திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாம்.

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் கடந்த வருடமே உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருந்த திரைப்படம் டெடி. ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் தியேட்டரில் வெளியிடாத முடியாத நிலைமை ஏற்பட்டது.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தற்போது நேரடியாக ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி இணையதளத்தில் வருகின்ற மார்ச் மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

teddy-march12-on-hotstar
teddy-march12-on-hotstar

நீண்ட நாட்களாக வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கு டெடி திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் திடீரென ஹாட்ஸ்டார் தளத்திற்கு சென்றது அவருக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான்.

இருந்தாலும் ரீமேக் படம் என்பதால் இதுவே நல்ல சாய்ஸ் எனவும் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாராம். ஆனால் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வரவேண்டும் என உறுதியாக உள்ளாராம்.

மேலும் மார்ச் 12ஆம் தேதி வெளியாகும் டெடி படத்தை வருகின்ற தமிழ் புத்தாண்டுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். சரியாக ஒரு மாத இடைவெளி இருப்பதால் படக்குழுவினர் ஓகே சொல்லி விடுவார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Trending News