கடந்த இரண்டு வருட காலமாக முழுவதும் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் ஆர்யாவின் புதிய படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆர்யா வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக இந்த படம் தோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக 2012ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற டெட்(Ted) என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது டெடி(Teddy). இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிசா நடித்துள்ளார்.
மேலும் இயக்குனர் மகிழ்திருமேனி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். டெடி படத்தின் டீசர் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் சில பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது.
இடையில் எதிர்பாராமல் விழுந்த பெரிய கேப் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய முடியாமல் தயாரிப்பு நிறுவனம் தடுமாறி வந்தது. இந்நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா டெடி படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகிறாராம்.
அந்தவகையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் மார்ச் 19ஆம் தேதி வெளியாக போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.