திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சார்பட்டா படத்தின் வெற்றி.. சம்பளத்தை இரண்டு மடங்கு ஏற்றிய ஆர்யா

முன்னரெல்லாம் தியேட்டரில் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றால்தான் நடிகர்கள் தங்களுடைய சம்பளங்களை ஏற்றுவார்கள். ஆனால் இப்போது ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றாலும் சம்பளத்தை ஏற்றுவதில் குறியாக இருக்கின்றனர்.

சில மாதங்களாகவே ஓடிடி ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டு இருக்கிறார் ஆர்யா. ஆர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளன.

இந்த இரண்டு படங்களும் அந்தந்த ஓடிடி தளங்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளதால் அடுத்தடுத்து ஆர்யாவின் படங்களை வாங்க அவர்கள் ரெடியாக இருக்கின்றனர். அதுவும் ஏகப்பட்ட கோடிகள் கொடுத்து.

இப்படி தனக்கு மார்க்கெட் ஏறுவதை கவனித்த ஆர்யா சும்மா இருப்பாரா. ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டாராம். என்னதான் அவருக்கு ஒடிடி படங்கள் வெற்றி கொடுத்தாலும் தியேட்டரில் ஒரு படம் வெற்றி பெற்றால்தான் அவருடைய சம்பளத்தை பற்றி பேச முடியும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

ஆனால் ஆர்யாவோ, அதெல்லாம் எனக்கு தெரியாது. கடைசியாக நடித்த இரண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் சம்பளத்தை ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை என தயாரிப்பாளர்களிடம் நேரடியாகவே தெரிவித்து வருகிறாராம்.

முன்னரெல்லாம் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆர்யா இனி தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு 20 கோடி சம்பளம் வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம்.

sarpatta-cinemapettai
sarpatta-cinemapettai

Trending News