வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டெடி பட இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா.. ஒரு வேல பார்ட் 2-வா இருக்குமோ.?

கடந்த ஆண்டு கொரனா ஊரடங்கு உலகம் முழுக்க நீடித்த தருணத்திலும் தமிழில் வேற லெவல் ஹிட் கொடுத்த படம் டெடி. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா நடித்த திரைப்படம் டெடி.

சாயிஷா, ஆர்யா டெடி என குறுகிய வட்டத்திற்குள் சுற்றவிட்டு சரியான மற்றும் தெளிவான முறையில் படமாக்கப்பட்ட இப்படம் ஊரடங்கு காலத்திலும் ஊரெங்கும் ஹிட் அடித்தது.

இப்படம் வெற்றியை கொண்டாட கூட நேரமற்று பிசியாக இருக்கும் ஆர்யா இப்போது சைக்கிளிங் சாகசங்களில் வெறித்தனமாக ஈடுபட்டுள்ளார்.

சக்தி சவுந்தரராஜன் மீண்டும் ஒரு படம் இயக்குவதற்காக ஆர்யாவை தேடவே பச்சைக்கொடி காட்டியுள்ளார் ஆர்யா. காரணம் கதை மற்றும் கதையம்சம் பிடித்துவிட்டதாம்.

சமீபத்தில் தொலைகாட்சியில் வெளிவந்த டெடி படத்திற்கு நல்ல டிஆர்பி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம், இது வேறு கதையாம் மீண்டும் வெற்றி இயக்குனருடன் ஆர்யா இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

teddy-cinemapettai
teddy-cinemapettai

Trending News