சமீபத்தில் ஒரு செய்தி ஒன்று வந்தது, நடிகர் ஆர்யா தன்னை காதலிப்பதாய் கூறி பிறகு சாயிஷாவை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தன்னிடம் குறிப்பிட்ட பணத்தை ஆர்யா வாங்கியதாகவும் ஒரு ஈழத்தை சேர்நத பெண் வழக்கு பதிவிட்டிருந்தார்.
இந்த வழக்கிற்காக இரவு நேரத்தில் கூட ஆர்யா விசாரனைக்காக காவல் நிலையத்திற்கு வரவைக்கப்பட்டார். இது அன்றைய செய்தி தாள்களின் பக்கங்களை நிறைத்திருந்தது. வித்ஜா என்கிற ஈழப்பெண் இப்போது ஜெர்மனியில் இருக்கிறார்.
அரசின் உயர்பதவி ஒன்றில் இருக்கும் அந்த பெண் சமீபத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாருக்கான நடவடிக்கையோ நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக காவல் துறைக்கு வந்து சேர்ந்தது.
இந்த வழக்கின் உன்மை நிலவரம் இப்போது தான் தெரிய வந்துள்ளது ஆர்யாவை போல ஆன்லைனில் பேசி ஏமாற்றியதற்காக இருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டது.
விசாரனையில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அர்மான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்யாவை போல் ஆள்மாறாட்டம் செய்து நடித்து வந்ததாக கூறிய அர்மானுக்கு ஹுசைன் என்கிற நண்பர் இதர உதவிகளை செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கிற்காக க்ரைம் ப்ராஞ்சில் தனி பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்த சென்னை காவல் ஆணையர் , மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீ சாருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் மன அதிர்ச்சியில் இருந்ததாகவும் என்னை நம்பியவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.